கடைசிநேர திக்திக்: நல்வாய்ப்பாக கண்டறியப்பட்ட கோளாறு; சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் எப்போது?

விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லவிருந்த பயணம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ள நிலையில், மறு பயண அட்டவணையை நாசா வெளியிட்டுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ்
சுனிதா வில்லியம்ஸ்pt web

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க கப்பற்படை கேப்டனான 'புட்ச்' ஆகியோர் நேற்று காலை விண்வெளி பயணம் மேற்கொள்ளவிருந்தனர். இந்நிலையில், தீடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அவரின் விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என நாசா அறிவித்தது. மீண்டும் அவர் இன்று செல்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அந்தப் பயணம் மீண்டும் ஒத்திப்போயுள்ளது.

இந்நிலையில், மீண்டும் எப்போது சுனிதா வில்லியம்ஸ் பயணிப்பார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது.

விண்ணுக்கு பறக்க தயாரான விண்வெளி வீரர்கள்!

அமெரிக்காவில் உள்ள முக்கிய இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனைதான் சுனிதா வில்லியம்ஸ். இவரும், அமெரிக்க கப்பற்படை கேப்டனான 'புட்ச்' வில்மோரும், விண்வெளி பயணம் மேற்கொள்வதற்காக, இந்திய நேரப்படி நேற்று (ஏப்ரல் 07, 2024) காலை 6 மணிக்கு புளோரிடாவில் உள்ள கென்னடி ஆய்வு மையத்தில் ஸ்டார் லைனர் விண்கலத்தில் அமர்ந்தனர்.

போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் விண்கலம் அட்லஸ் வி ராக்கெட்டில் முன் பகுதியில் இருக்க, கவுண்டவுன் இந்திய நேரப்படி நேற்று காலை 8:04-ஐ நெருங்கியது. அப்போது கடைசி நேரத்தில் விண்கலத்தில் ஆக்ஸிஜன் வால்வில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் நாசாவின் கட்டளை மையத்தில் இருந்து விண்கலத்தில் அமர்ந்திருந்த விண்வெளி வீரர்களுக்கு அறிவிப்பு ஒன்று வந்தது. அதுதான் திட்டம் ஒத்திவைக்கப்படுவதற்கான அறிவிப்பு.

திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு! 

நல்வாய்ப்பாக, ராக்கெட் கிளம்புவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே சுனிதா வில்லியம்ஸ் பயணம் செய்யவிருந்த விண்கலத்தில் இருந்த தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து, ‘அடுத்த 24 மணி நேரத்திற்குள் நமது மற்றொரு வீடான சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லலாம்’ என்கிற எதிர்பார்ப்போடு இருந்த சுனிதா வில்லியம்ஸ், விண்கலத்தில் இருந்து தரை இறங்கினார். உடனடியாக ஸ்டார் லைனர் விண்கலத்தில் இருக்கும் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்வதற்கான பணியில் நாசா மற்றும் போயிங் பொறியாளர்கள் ஈடுபட்டனர்.

சுனிதா வில்லியம்ஸ்
'தயவுசெஞ்சு வாங்க.. உங்களதான் நம்பியிருக்கோம்'- இந்தியாவுக்கு கோரிக்கை வைத்த மாலத்தீவு அமைச்சர்!

நாசாவை பொறுத்தவரை சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு வீரர்களை அனுப்புவதற்காக தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை 2009 ஆம் ஆண்டில் இருந்து ஊக்குவித்து வருகிறது.

அதன் வகையில் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் க்ரூ டிராகன் விண்கலம் மூலமாக வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வீரர்களை அனுப்பி வரும் நிலையில், போயிங் நிறுவனத்தின் ஸ்டார் லைனரும் 4 ஆண்டுகளாக பரிசோதனையில் இருந்தது. ஆனால், தற்போது விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த அறிவிப்பும் தோல்வியா?

ஒருவேளை திட்டமிட்ட நேரத்தில் விண்கலம் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டிருந்தால், 30 நிமிடங்களில் ஸ்டார் லைனர் பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டு அடுத்த 24 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குள் சுனிதா வில்லியம்ஸ் நுழைந்து இருப்பார்.

ஆனால், எதிர்பாராத தொழில்நுட்பக்கோளாறு காரணமாக திட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள நாசா, பயணத் திட்டத்தின் மறு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய நேரப்படி இன்று (08.5.2024) காலை 7.40 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு செல்ல உள்ளார் என்று தெரிவித்திருந்தது.

சுனிதா வில்லியம்ஸ்
’ஒரே இருட்டா இருக்கே’ கருந்துளையில் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும்? - நாசா வெளியிட்ட திக்.. திக் வீடியோ

வெளியானது இறுதி கட்ட தேதி!

இந்நிலையில், இன்று மீண்டும் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளிபயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று நாசா அறிவித்துள்ளது. இதன்படி, போயிங் ஸ்டார் லைனர் திட்டத்தின் அட்லஸ் v ராக்கெட்டின் ஆக்சிஜன் வால்வை புதிதாக மாற்றப்போவதாக நாசா விளக்கமளித்துள்ளது. இதற்கு ஒரு வார காலம் மேல் தேவை என்பதால் அடுத்த தேதியாக மே 17 ஆம்தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுனிதா வில்லியம்ஸின் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது போயிங் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. ஏனெனில், இந்த விண்கலத்தின் பரிசோதனை நான்காம் முறையாக தோல்வி அடைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com