3 ஆம் கட்ட தேர்தல் -வாக்கு சதவீதம் முகநூல்
இந்தியா
3ம் கட்ட மக்களவை தேர்தல் | பதிவான வாக்கு சதவீதம் என்ன?
மக்களவைக்கு 3ம் கட்டமாக தேர்தல் நடைபெற்ற 93 தொகுதிகளில் சுமார் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 93 தொகுதிகளில் மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் அமைதியான முறையில் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக அசாமில் 81.61% வாக்குகள் பதிவாகின.
தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள தகவலின்படி,
அசாமில் 81.61%
கோவாவில் 75.20%,
மேற்குவங்கத்தில் 75.79%,
கர்நாடகத்தில் 70.41%,
சத்தீஸ்கரில் 71.06%,
மத்தியப்பிரதேசத்தில் 66.05%,
தாதர் நகர் ஹவேலி மற்றும் டாமன் டயூவில் 69.87%,
மகாராஷ்ட்ராவில் 61.44%,
பீகாரில் 58.18%,
உத்தரப்பிரதேசத்தில் 57.34%,
குஜராத்தில் 58.98%
என்ற அளவில் வாக்குகள் பதிவாகி உள்ளன.