Published : 17,Sep 2020 02:13 PM

இளம் வயதினர், குழந்தைகளிடம் கொரோனா தடுப்பூசியை சோதிக்கும் சீன நிறுவனம் சினோவாக்

Chinese-firm-to-test-coronavirus-vaccine-in-teenagers--children

சீனத் தடுப்பூசி நிறுவனமான சினோவாக் பயோடெக் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடம் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

image

சீன தடுப்பூசி தயாரிப்பாளர் சினோவாக் பயோடெக் ஏற்கெனவே பெரியவர்களுடனான தடுப்பூசி ஆய்வின் இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் அதன் சோதனையை இப்போது விரிவுபடுத்துகிறது. இதன் மூலமாக மூன்று முதல் 17 வயதிற்குட்பட்ட 552 ஆரோக்கியமான பங்கேற்பாளர்களுடன், சினோவாக்கின் ஒருங்கிணைந்த  முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் ஆகிய தடுப்பூசி சோதனைகள் செப்டம்பர் 28 ஆம் தேதி வடக்கு சீன மாகாணமான ஹெபியில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனைக்கு ஏற்கெனவே சீன சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது என்று சினோவாக் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சினோவாக் கொரோனா தடுப்பூசி ஏற்கெனவே, இந்நிறுவனத்தின் 90% ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்