Published : 30,Aug 2020 01:39 PM

மது விற்பனையில் மதுரையைப் பின்னுக்குத் தள்ளிய சென்னை !

Chennai-over-took-Madurain-in-TASMAC-sales-yesterday

தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் நேற்று மட்டும் 243 கோடியே 12 லட்சம் ரூபாய்க்கு மது பானங்கள்‌ விற்பனையாகியுள்ளன.

தமிழகத்தில் கொரோனா தடுப்புக்காக, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால், முந்தைய தினமான சனிக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் மதுபானங்கள் விற்பனையாகின்றன. அதன்படி நேற்று, 243 கோடியே 12 லட்சம் ரூபாக்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன.

image

வழக்கமாக மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக மது வகைகள் விற்பனையான நிலையில், நேற்று சென்னை மண்டலம் முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னை மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் 52 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையாகின. மதுரை மண்டலத்தில் 49 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 48 கோடியே 26 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை நடந்துள்ளது. சேலம் மண்டலத்தில் 47 கோடியே 38 லட்சம் ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 45 கோடியே 23 லட்சம் ரூபாய்க்கும் மதுவகைகள் விற்பனையாகியுள்ளன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்