[X] Close

மாஸ்க் அணியாத கடைக்காரர்கள்: சரமாரியாக தாக்கிய காவலர்கள்!

இந்தியா

UP-Official-Thrashes-Mask-Clad-Men-During-Checking-Drive
மாஸ்க் அணியாத கடைக்காரர்களை காவலர்களுடன் சேர்ந்து தாக்கிய அரசு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 
உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் அசோக் சவுத்ரி , போலீசாருடன் இணைந்துகொண்டு கொரோனா தடுப்புப் பணி நிமித்தமாக கடைகடையாக சோதனை செய்தார்.
 
அப்போது கடை ஒன்றில் மாஸ்க்குக்கு பதிலாக கைக்குட்டைகளை அணிந்திருந்த இரண்டு கடைக்காரர்களை வெளியே இழுத்துப்போட்டு, காவலர்களுடன் சேர்ந்து அந்த அரசு அதிகாரியும் லத்தியால் சரமாரியாக அடித்துள்ளார்.
 
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து, அசோக் சவுத்ரியை சஸ்பெண்ட் செய்து அரசு உத்தரவிட்டது.
 
தாக்கப்பட்ட கடைக்காரர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், வாய், மூக்குப் பகுதியை மூடுவதற்கு கைக்குட்டை பயன்படுத்தியதால் அந்த அதிகாரி கோபடைந்தார். முகக் கவசமாக கைக்குட்டையையும் பயன்படுத்தலாம் என அரசு தெரிவித்துள்ளது அதிகாரிகளுக்கே தெரியவில்லை’’ என்றார்.
 
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close