Published : 04,Aug 2020 07:08 AM

சிவகங்கையில் போலி மருத்துவர் கைது!

A-fake-doctor-was-arrested-near-Poovanthi-in-Sivagangai-district-

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

பூவந்தி அருகே திருமாஞ்சோலைையைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (34). இவர் டி.பார்ம் படிப்பு படித்துவிட்டு, இப்பகுதியில் நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்தி சிகிச்சையளித்து வந்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனுக்கு புகார் வந்தது. இதையடுத்து மருத்துவப்பணிகள் மாவட்ட இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன் திருமாஞ்சோலை சென்று ராஜமாணிக்கத்திடம் விசாரணை நடத்தினார்.

அப்போது இவர் டாக்டருக்கு படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்தது தெரியவந்தது. பின்னர் பூவந்தி காவல் நிலையத்தில் இளங்கோ மகேஸ்வரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி மருத்துவர் ராஜமாணிக்கத்தை கைது செய்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்