மின் கட்டண விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் கையில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் மின் கட்டணம் வழக்கமாக இருப்பதை விட அதிக மடங்கு உயர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த வழக்கையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், மின் கட்டண விவகாரத்தில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று அதிக மின் கட்டண விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் கையில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு தொண்டர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
மேலும், தி.மு.க பொருளாலர் துரைமுருகன், வேலூர் எம்.பி கதிர் ஆனந்த், அணைகட்டு எம்.எல்.ஏ நந்தகுமார் ஆகியோர் கறுப்புக் கொடி ஏந்தி காட்பாடியில் உள்ள தி.மு.க பொருளாளர் வீட்டின் மூன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், மின்கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி, அதிமுக அரசை கண்டித்து கறுப்புக் கொடியேந்தி திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு தலைமையில் திருச்சி திமுக அலுவலகத்தில் தனி மனித இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திமுக தொண்டர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Loading More post
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்