Accused
Accusedpt desk

சென்னை: தள்ளாடி வந்த இளைஞர் - சோதனையில் சிக்கிய போதை மாத்திரைகள் பறிமுதல்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகள் பறிமுதல். போதை மாத்திரை போட்டுக் கொண்டு தள்ளாடி வந்த இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Published on

செய்தியாளர்: ஆனந்தன்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து ரயில் மூலமாக போதை மாத்திரைகளை சென்னைக்கு கடத்தி வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அந்த தகவலின் அடிப்படையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது போதை ஊசி போட்டுக் கொண்ட ஒருவர் தள்ளாடி தள்ளாடி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த இளைஞர் கையில் வைத்திருந்த டிராவல் பேக்கை சோதனை செய்தனர். அப்போது அதில், கட்டுக்கட்டாக போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள்
பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள்pt desk

இதையடுத்து அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில் அவர், சென்னை அம்பத்தூர் நேரு நகரில் உள்ள மலையாளத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மனோஜ் (18) என்பது தெரியவந்தது. அவர் ஹைதராபாத்தில் உள்ள முன்னா என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து அம்பத்தூர் பகுதியில் விற்பனை செய்வதும் தெரியவந்தது.

Accused
பெரம்பலூர்: சொத்துத் தகராறில் தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் கைது – அதிரவைக்கும் சிசிடிவி காட்சி!

இதனை அடுத்து மனோஜை கைது செய்த காவல்துறையினர் 6,890 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com