பொதுமக்கள் ஒத்துழைத்தால்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் மே 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெறுகிறது. இத்தகைய சூழலில் பொது முடக்கத்தை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசிய முதலமைச்சர் பழனிசாமி,
சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து வரக்கூடியவர்களால் தொற்று அதிகரித்துள்ளது. சென்னையில் மக்கள் தொகை அதிகம் உள்ள காரணத்தினால் தொற்று அதிகரித்துள்ளது. அதேசமயம் கொரோனா தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது.
சிறப்பான சிகிச்சையால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைத்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும். மக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான் வைரஸ் பரவலை தடுக்க முடியும். நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் என தெரிவித்தார். மேலும்,
மருத்துவ நிபுணர்களின் அறிவுரைப்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில பேரிடர் மேலாண்மை குழுவுடன் 14 முறை ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. 12 மண்டல அளவிலான சிறப்பு பணிக்குழு அமைத்து கொரோனா தடுப்புப் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.தொழில் துறையினருக்கு அளிக்க வேண்டிய தளர்வுகள் குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது.
தமிழக அரசின் செலவில் 170 ரயில்களில் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவை எதிர்கொள்ள புதிதாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்காத வகையில் விலையில்லா அரிசி, சர்க்கரை, எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.அம்மா உணவகங்கள், சமூக உணவுக்கூடங்கள் மூலம் நாள்தோறும் 2 லட்சம் பேருக்கு உணவு விநியோகம்.24 லட்சம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கி வருகிறோம் என தெரிவித்துள்ளார்
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!