Published : 21,May 2020 05:04 AM

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் குறித்து அவதூறு - 6 பேர் மீது எஃப்.ஐ.ஆர்

police-case-filed-against-six-person-about-madurai-meenakshi-amman-marriage

(கோப்பு புகைப்படம்)

மதுரை மீனாட்சி அம்மன் குறித்து சமூக வலைத்தளத்தில் தவறாக பதிவிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்றது. கொரோனா பாதிப்பு காரணமாக, மீனாட்சி திருக்கல்யாணம் விழாவில் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்றனர். இதனால், திருக்கல்யாண நிகழ்வுகள் இணையதளங்களிலும், தொலைக்காட்சிகளின் வாயிலாகவும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு ...

தமிழகத்தின் வழியாக புதுச்சேரி பேருந்துகள் இயக்கம்...!

இந்த திருக்கல்யாணத்தை பற்றி ஃபேஸ்புக்கில் சிலர் அவதூறாக செய்தி பரப்பியதாக ஈரோட்டை சேர்ந்த ஆனந்தன் என்பவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் மனோகரன், சிவா, ரஜினி, அரவிந்தன், செல்வேந்திரன், அந்தோணி, கலீம் முகமது ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்