Published : 13,Jun 2017 04:49 AM
அழுகிய நிலையில் நடிகை உடல் மீட்பு: கொலை?

அழுகிய நிலையில் நடிகையின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹரித்துவாரைச் சேர்ந்தவர் கிரித்திகா சவுத்ரி. இவர் மும்பை அந்தேரி பகுதியில் தங்கி சினிமாவில் நடித்து வந்தார். மாடலிங்கும் செய்து வந்த இவர், கங்கனா ரனவ்த் நடித்த ரஜ்ஜோ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தி தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் இவர் வீடு கடந்த இரண்டு மூன்று நாட்களாக பூட்டியே கிடந்தது. நேற்று நள்ளிரவு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் கிரித்திகாவின் உடல் கிடந்ததைக் கண்டனர். இதையடுத்து அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் எதற்காக இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? நடிக்க வாய்ப்பில்லாமல் தற்கொலை செய்துகொண்டாரா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகையின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது, அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.