[X] Close

அந்த ரன் அவுட்டுக்கு நான்தான் காரணம்: டு பிளிசிஸ்

de-villers-du-plessis

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய பீல்டர்கள் டிவில்லியர்ஸ், மில்லர், இம்ரான் தாஹிர் ஆகியோரின் விக்கெட்டுகளை ரன் அவுட் மூலம் எடுத்தனர். இதுதான் போட்டியின் மாற்றத்துக்கு காரணமாக இருந்தது. இதுபற்றி தென்னாப்பிரிக்க அணியின் டு பிளிசிஸ் கூறும்போது, ’டி வில்லியர்ஸின் ரன் அவுட்டுக்கு நானே பொறுப்பு ஏற்கிறேன். அது என் தவறுதான். அவர் எங்கள் அணிக்கு முக்கியமான வீரர். ஆனால் அவர் அவுட்டாக நான் காரணமாகிவிட்டேன். அதே போல இன்னொரு முறை ஒரு ரன் எடுக்க நினைத்து எதிர் முனையில் இருந்த மில்லரை அழைத்தேன். ஆனால், அதுவும் தவறான முடிவாகிவிட்டது. நானும் மில்லரும் கிரீசில் ஒரே இடத்தில் நின்றது மோசமான ஒன்றுதான்’ என்றார்.

Related Tags : de williersdu plessis

Advertisement

Advertisement
[X] Close