Published : 10,Jun 2017 03:43 PM

ஸ்டாலின் விரக்தியில் பேசுகிறார்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

CM-EPS-Criticises-MK-Stalin

தமிழக அரசைக் கவிழ்க்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால் அரசுக்கு எதிராக விரக்தியில் பேசுவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியில் காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சியில் இருந்த போது காவிரி விவகாரத்தில் திமுக என்ன செய்தது என கேள்வி எழுப்பினர். மேலும், நேரத்திற்கு நேரம் மு.க.ஸ்டாலின் கருத்தை மாற்றிக் கொள்கிறார் என்றும் பழனிசாமி விமர்சித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை மலேசியாவில் நுழைய அனுமதி வழங்கப்படாத விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் அதிமுக அம்மா அணி கேள்வி எழுப்பும் என்று கூறிய அவர், மூத்த அரசியல் தலைவரான வைகோவை அவமதித்த செயல் கண்டனத்திற்கு உரியது எனவும் கூறினார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்