Published : 17,Mar 2020 05:06 AM
இந்தியாவில் 125 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா தாக்கத்தால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பால் 3200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா கொடுமை: இத்தாலியில் நேற்று மட்டும் 368 பேர் உயிரிழப்பு!!
இந்நிலையில் கொரோனா தாக்கத்தால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் புதியதாக 2 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அம்மாநிலத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக கேரள மாநிலத்தில் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இரண்டு பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
சோப்புகள், முகக்கவசம், சானிடைசர்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை
கொரோனா அச்சுறுத்தலை சாதகமாக்கி முகக்கவசம், சானிடைசர், சோப்புகள் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.