நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா, தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
நிர்பயா வழக்கு குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய நால்வரையும் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிட தேதி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து கருணை மனு மற்றும் சீராய்வு மனுக்களை குற்றவாளிகள் ஒவ்வொருவராக தாக்கல் செய்தனர். இதன் காரணமாக அவர்களது தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதி பிப்ரவரி ஒன்றாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மீதமிருக்கும் 4 வாய்ப்புகள்...!
அதே சமயம் குற்றவாளிகள் தாக்கல் செய்த கருணை மனுக்கள் குடியரசுத் தலைவராலும், சீராய்வு மனுக்கள் நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, நான்கு பேரையும் மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ராணா உத்தரவிட்டார். சீராய்வு மனு, மறுசீராய்வு மனு, கருணை மனு, மேல்முறையீட்டு மனு என குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் நான்கு வாய்ப்புகள் இருந்த நிலையில், பவன்குமார் குப்தாவை தவிர மற்ற இருவரும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி விட்டனர்.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மீதமிருக்கும் 4 வாய்ப்புகள்...!
இந்நிலையில், பவன் குமார் குப்தா, தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் புதிதாக சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நடைபெறவுள்ளதால், மரண தண்டனை நிறைவேற்றப்படும் தேதி மீண்டும் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்