பெரம்பலூர் அருகே ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சித் தலைவர் தேர்தலில் திமுக சார்பில் மணிவேல்(72) என்பவர் போட்டியிட்டார். இதில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுப்ரமணியை விட 160 வாக்குகள் வித்தியாசத்தில் மணிவேல் வெற்றி பெற்றார்.
தேர்தல் ஆணைய இணையதளத்தில் பெரம்பலூர் முடிவுகள் இல்லை
வெற்றிக்கான சான்றிதழை பெற்றுச் சென்ற நிலையில், நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை மணிவேல் உயிரிழந்தார். இவர், அண்ணா ஆட்சியில் பெரம்பலூர் எம்எல்ஏவாக பதவி வகித்த வெங்கலம் மணி என்பவரது தம்பி ஆவார். இவருக்கு மனைவி, 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி