பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் வெளியே தெரிந்த கோட்டை மற்றும் கோவில்!

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியே தெரியும் மாதவ பெருமாள் கோவில்!
நீருக்கடியில் இருக்கும் கோட்டையும் கோவில் கோபுரமும்
நீருக்கடியில் இருக்கும் கோட்டையும் கோவில் கோபுரமும் கூகுள்

பவானிசாகர் அணைக்கட்டு

பவானிசாகர் அணைக்கட்டு
பவானிசாகர் அணைக்கட்டு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நீர்த்தேக்கத்திற்காக, 1948- 1955 ல் பவானிசாகர் அணைக்கட்டு கட்டப்பட்டது. அணைக்கட்டிற்காக அப்பகுதியில் இருந்த கிராம மக்கள் அணைவரும் பண்ணாரி வனப்பகுதிக்கு குடியேறினர்.

அத்துடன் அவர்கள் வழிபாடு செய்து வந்த மாதவ பெருமாள், சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோயில்களில் உள்ள சிலைகள் அகற்றப்பட்டு, கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் புதிதாக ஒரு கோயிலை கட்டி இச்சிலைகளை அங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.

நீருக்கடியில் இருக்கும் கோட்டையும் கோவில் கோபுரமும்
’ஒரே இருட்டா இருக்கே’ கருந்துளையில் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும்? - நாசா வெளியிட்ட திக்.. திக் வீடியோ

தொல்லியல் ஆய்வாளார்கள் கூறுவது என்ன?

மாதவ பெருமாள் கோவிலை அடுத்து அப்பகுதியில் டணாய்க்கன் கோட்டை ஒன்றும் இருந்தது. இந்த கோட்டையின் வழியாக மக்கள் கேரளாவிற்குள் நுழைந்து வர்த்தகம் செய்து வந்தனர் என்றும், இந்த கோட்டையும் கோவிலும் சுமார் 750 வருடத்திற்கும் மேற்பட்டது என்றும் தொல்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நீரில் மூழ்கிய அணைக்கட்டும், கோவில்களும்

பவானிசாகர் அணை கட்டுமானப் பணி முடிந்ததும், அணையின் 105 அடி நீர்த்தேக்கத்தில் 54 அடி கோவில்களும் கோட்டைகளும் நீரில் மூழ்கின.

இருப்பினும், அணையின் நீர்தேக்கம் 54 அடிக்கும் கீழே குறையும் பொழுது நீருக்கடியில் இருக்கும் கோட்டையும் கோவில் கோபுரமும் வெளியே தெரியும். கடைசியாக 2018ம் அணையின் நீர் மட்டம் குறைந்த பொழுது இந்த கோயில்கள் வெளியே தெரிந்தன. மறுபடி ஆறு ஆண்டுகள் கழித்து 2024ல் அணையின் நீர்மட்டம் 46 அடியாக குறைந்துள்ளதால் மீண்டும் மாதவராய பெருமாள் கோவிலும் டணாய்க்கன் கோட்டையும் வெளியே தெரிகிறது. இன்னும் அணையின் நீர்மட்டம் குறைந்தால், கோவிலை முழுவதுமாக பார்க்கலாம் என்று கூறப்படுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com