திருச்செந்தூர் | திடீரென 50 அடிக்கு உள்வாங்கிய கடல் நீர்.. ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுத்த பொதுமக்கள்!

நேற்றைய தினம் அமாவாசை என்பதால் கடல் கடந்த இரு தினங்களாகவே திருசெந்தூர் கடல் பகுதியில் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
திருச்செந்தூர்
திருச்செந்தூர்புதிய தலைமுறை

திருச்செந்தூரில் திடீரென 50 அடிக்கும் மேல் உள்வாங்கிய கடல். ஆபத்தை உணராமல் கடலுக்குள் இறங்கி நின்ற பக்தர்கள்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரை பகுதியில் இன்று மதியம் கடல் 50 அடிக்கும் மேல் உள்வாங்கியதால் பரபரப்புடன் காணப்பட்டது. பொதுவாக கடற்கரை பகுதியில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் கடலின் சீற்றம் அதிகமாக இருக்கும்.

திருச்செந்தூர்
'மஞ்ஞுமல் பாய்ஸ்' படம் எதிரொலி! கிளம்பும் புது சர்ச்சை.. தமிழக போலீசாருக்கு வைக்கப்பட்ட செக்! ஆனால்?

இந்த நிலையில் நேற்றைய தினம் அமாவாசை என்பதால் கடல் கடந்த இரு தினங்களாக சீற்றம் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில், இன்று மதியம் திருச்செந்தூர் முருகன் கோவில் பகுதியில் கடல் திடீரென 50 அடிக்கு மேல் உள்வாங்கிய நிலையில் காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் கடலுக்குள் உள்ள பாசிகள் படிந்த பாறையில் நின்று கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிலர் தங்களது செல்போன்களில் செல்ஃபி எடுத்தனர். இதை பார்த்த அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இருந்ததும் அதை பெரிதாக கண்டுகொள்ளாத பொதுமக்கள் கடலில் நீராடி மகிழ்ந்தனர். சிறிது நேரத்திற்கு பின்னர் கடல் மீண்டும் தனது சாதாரண நிலைக்கு திரும்பியது. திருச்செந்தூரிலும் கடல் உள்வாங்கி இருப்பதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com