“தோல்விக்கு முக்கிய காரணம் ஹர்திக் கேப்டன்சி” - பயிற்சியாளர் குழுவிடம் தெரிவித்த முன்னணி வீரர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு காரணம் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி என மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் அணி நிர்வாகத்திடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியாpt web

நடப்பு ஐபிஎல் தொடர் க்ளைமேக்ஸ்க்கு முந்தைய பரபரப்புடன் காணப்படுகிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் தவிர மீதமுள்ள 2 இடங்களுக்கு 4 அணிகள் போட்டியிடுகின்றன. ஆனால், 5 முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியோ தொடர் முழுவதும் மோசமான தோல்விகளை அடைந்து தொடரில் இருந்தே வெளியேறியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 4 மட்டுமே வென்று 8 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில், அணியின் வீரர்கள் தோல்விக்கு முக்கிய காரணம் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி என பயிற்சியாளர்கள் குழுவிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து அணியின் முக்கிய வீரர்களை தனி தனியாக சந்தித்து அணியின் நிர்வாகம் தரப்பில் பேசியுள்ளனர். இதுகுறித்து புதிய தலைமுறையிடம் பேசிய மும்பை அணியின் பயிற்சியாளர்களில் ஒருவர், “ரோகித் சர்மா நீண்ட நாட்களாக கேப்டனாக இருந்ததால் புதிய கேப்டன் நியமனம் வீரர்களுக்கு புதிதாக தெரிகிறது. எல்லா அணிகளிலும் இது நடைபெறும் ஒரு விஷயம்” என தெரிவித்தார்.

குறிப்பாக அணியின் தோல்விக்கு பிறகு வீரர்கள் பெயரை குறிப்பிட்டு தோல்விக்கு காரணம் என ஹர்திக் பாண்டியா பேசியது வீரர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது தெரிய வருகிறது. இந்த ஆண்டு தொடர் முடிவுக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்யும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com