Published : 18,Dec 2019 01:06 PM

அஜித் வீட்டில் சோதனை நடந்ததாக வெளியான தகவல் பொய் - வனச்சரகர்

Reports-that-the-raid-was-conducted-on-actor-Ajith-s-house-is-rumour

நடிகர் அஜித் வீட்டில் சோதனை நடந்ததாக வெளியான தகவல் பொய் என வனச்சரகர் தெரிவித்துள்ளார்

நடிகர் அஜித் குமாரின் சினிமா பிஆர்ஓ  சுரேஷ் சந்திரா. இவர்  மலைப்பாம்பு வளர்ப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.  அந்த தகவலின் அடிப்படையில் சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் வனத்துறை சோதனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், அஜித் வீட்டில் சோதனை நடந்ததாக வெளியான தகவல் பொய் என சென்னை வனச்சரகர் மோகன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து தெரிவித்துள்ள மோகன், அஜித்தின் உதவியாளர் சுரேஷ் சந்திரா வீட்டில் மலைப்பாம்பு வளர்க்கப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால் இதுவரை அதுகுறித்து வழக்குப்பதிவோ, விசாரணையோ பெறப்படவில்லை என தெரிவித்துள்ளார்.


“பந்துவீசும் போது முஸ்லீம்னா நெனப்பேன்?.. இந்தியன். அவ்ளோதான்” - இர்ஃபான் பதான்


சோதனை தகவல் குறித்து பேசியுள்ள பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா, அப்படி எந்த சோதனையும் நடக்கவில்லை என்றும், வெளியான தகவல் வதந்தி எனவும் தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்