விமானத்தை வெடிக்க வைக்கப்போவதாக பீதி கிளப்பிய இலங்கை இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு எம்.எச் 128 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று நள்ளிரவு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பயணி ஒருவர் திடீரென எழுந்து, ’வெடிகுண்டுகள் வச்சிருக்கேன். விமானத்தை வெடிக்க வைக்கப் போறேன்’ என்று கூறிய விமானிகள் அறையான காக்பிட்டுக்குள் நுழைய முற்பட்டார். இதனால் பீதி அடைந்த பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் அவரை பிடித்து இழுத்தனர். பின்னர் அவரின் கைகளை கட்டி, இருக்கையின் அடியில் தள்ளினர்.
இதையடுத்து விமானம் மெல்போர்ன் விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. அங்கு தயாராக இருந்த காவல்துறையினர் மிரட்டிய நபரை பிடித்துச்சென்று விசாரணை நடத்தினர்.
அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்தது. இதையடுத்து விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் மெல்போர்ன் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Loading More post
குஜராத்: தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு - 20 பேரின் நிலை என்ன?
’சர்வாதிகாரிகள் மரித்துப் போவார்கள்’-கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு!
’குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல’ - பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங். போராட்டம் அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் பட்டேல் - விரைவில் பாஜகவில் ஐக்கியமா?
தி.மலையில் கருணாநிதி சிலை வைக்கும் இடம் குறித்த வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்