[X] Close

இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை: போராட்டங்கள் வலுக்கிறது

protest-against-ban-on-sale-of-cattle-for-slaughter

இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

மதுரை நெல்பேட்டை பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில், மத்திய அரசின் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும். புதிய திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 100க்கும் மேற்‌பட்டோர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்ப்புலிகள் அமைப்பு சார்பாக மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 20 பேர் கைது கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் தடையை கண்டித்து ,திருச்சி பாலக்கரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பினர் 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Advertisement

கோவை சித்தாபுத்தூரில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய ஆதித் தமிழர் கட்சியினர், தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசின் சட்டம் உள்ளதாக குற்றம்சாட்டினர். இச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் அவர்கள் முழக்கமிட்டனர்.

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் தமிழ்ப் புலிகள் அமைப்பினர் மத்திய அரசைக் கண்டித்து பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர் பின்னர் மாட்டிறைச்சி உட்கொண்டும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்ப் புலிகள் அமைப்பினர் மத்திய அரசின் தடையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Advertisement

இதேபோல் கொடைக்கானலில் இறைச்சி வியாபாரிகள் மற்றும் சமூக ஜனநாயக சக்திகள் இணைந்து மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.

இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள தடைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள், சமூக ஜனநாயக அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கேரளாவில் 200க்கும் மேற்ப்பட்ட இடங்களில் மாட்டிறைச்சி விருந்துகள் ஏற்பாடு செய்து போராட்டம் நடத்தினர். கர்நாடகா, கேரளா முதல்வர்கள் இத்தடைக்கு எதிராக எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் புதுவையில் மட்டும் மாட்டிறைச்சிக்கு தடை இல்லை எனவும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close