Published : 30,Oct 2019 11:33 AM

முன்னாள் மேயர் உள்பட மூவர் கொலை வழக்கு: திமுக பிரமுகர் கைது

Nellai-murder-case--dmk-cadre-arrested

நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாள் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் பணிபெண் மாரியம்மாள் ஆகியோர் ஜூலை 23ஆம் தேதி மதியம் அவர்களது வீட்டில் கத்தியால் குத்தி படுகொலை செய்யபட்டனர். இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மூவர் கொலை தொடர்பாக திமுக பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்