[X] Close

அரபிக்கடலில் உருவானது ‘க்யார் புயல்’ - இந்திய வானிலை மையம் 

The-Kyar-Storm-originated-in-the-Arabian-Sea

அரபி கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த சில நாட்களாக அரபி கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து வந்தது. இதனால் லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர். 

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

மேலும், “க்யார் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் மும்பையில் இருந்து 380 கிமீ தெற்கு தென்மேற்கு திசையில் உள்ளது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் ஓமனை நோக்கி நகரும். இதனால் இந்தியாவில் மேற்கு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் க்யார் தீவிர புயலாக மாறும். தொடர்ந்து அதி தீவிர புயலாக மாறும். இதனால் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை” எனத் தெரிவித்துள்ளது.  


Advertisement

Advertisement
[X] Close