[X] Close

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை..!

Stress-in-life-made-mother-to-poison-and-kill-the-son

கோயம்பேட்டில் குடும்ப பிரச்னை காரணமாக மகனுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் வசந்த கிருஷ்ணன். இவரது மனைவி திவ்யா (27). இவர்களுக்கு திருமணமாகி லட்சுமி பிரசாத் (9) என்ற மகன் உள்ளார். வசந்த கிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

குடிப்பழக்கத்தை மறக்க, வசந்த கிருஷ்ணன் மருத்துவ சிகிச்சையும் பெற்றதாக கூறப்படுகிறது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஈக்காட்டுத்தாங்கலில் வசந்த கிருஷ்ணன் தங்கியுள்ளார். வீட்டில் திவ்யாவும் அவரது மகனும் மட்டும் இருந்துள்ளனர்.


Advertisement

மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த திவ்யா நேற்று தனது மகனுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு தானும் அந்த விஷத்தை குடித்தார்.

 வீட்டிற்கு சென்றதிவ்யாவின், தம்பி இருவரும் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் திவ்யா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மயக்க நிலையில் இருந்த லட்சுமி பிரசாத்தை, எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்து போன திவ்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close