[X] Close

தவறாக வந்த பேருந்தை திருத்திய பெண்- வைரலாகும் வீடியோ

Bus-running-on-wrong--lane-in-Kerala--video-becomes-viral

சாலையில் தவறான பாதையில் வந்த பேருந்தை சரியான பாதைக்கு பெண் ஒருவர் திருப்பவைத்த வீடியோ வைரலாகி உள்ளது. 

கேரளா மாநிலத்தில் சாலை பகுதியில் அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்தப் பேருந்து சாலையில் போடப்பட்டிருக்கும் கோடுகளை மீறி தவறான பாதையில்  சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த கோட்டில் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்தார். அவர் இந்தப் பேருந்திற்கு வழிவிடாமல் இருந்தார். இதனையடுத்து பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை கோட்டை தாண்டி சரியான பாதைக்கு திருப்பி மீண்டும் சென்றார். 


Advertisement

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இருக்கும் பெண்ணிற்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் தவறான பாதையில் பயணித்தால் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம் எனத் தெரிவித்துள்ளனர். 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close