[X] Close

சிறுமியை கொடூரமாக தாக்கிய ‘டியூசன் டீச்சர்’ கைது

Tuition-Teacher-arrested-for-attacked-first-std-girl-in-Kanyakumari

கன்னியாகுமரியில் ஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய புகாரில் டியூசன் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரம்படி காயங்களுடன் ஐந்து வயது மதிக்கத்தக்க மாணவியின் புகைப்படம் ஒன்று நியாயம் கிடைக்கும் வரை பகிருங்கள் என்ற அடைமொழியுடன் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதில், கன்னியாகுமரி மாவட்டம் பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் புகைப்படம் குறித்து விசாரிக்குமாறு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், குளச்சல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 


Advertisement

மாணவி படிக்கும் பள்ளியை கண்டறிந்த காவல்துறையினர் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். புகைப்படத்தில் இருக்கும் மாணவி ஒன்றாம் வகுப்பு படித்து வருவதாகவும், காலாண்டு தேர்வின் போது மயங்கி விழுந்ததாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். அதுகுறித்து மாணவியிடம் கேட்டதற்கு, டியூசன் ஆசிரியர் ஜெசிமோள் என்பவர் ஸ்டீல் அகப்பை மற்றும் பிரம்பால் அடித்து துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஜெசிமோளை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close