தமிழகத்தின் பல இடங்களில் வியாபாரிகளிடம் நூதன கொள்ளையில் ஈடுபட்ட வெளிநாட்டு ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மளிகை கடை நடத்தி வருபவர் கருப்பையா. இவரது கடைக்கு ஜோடியாக வெளிநாட்டு ஆண், பெண் வந்துள்ளனர். கடையில் வேலைபார்க்கும் பணிப்பெண்ணிடம் சி சீரிஸ் 2ஆயிரம் நோட்டுகள் இருக்கிறதா என கேட்டுள்ளனர். இல்லை என மறுத்த பணிப்பெண்ணிடம் பணம் குறித்து கேட்டு தொடர்ந்து வற்புத்தியுள்ளனர். இதனை அடுத்து தங்களிடம் 500 ரூபாய் நோட்டுகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 500 ரூபாயாக இருந்தாலும் பரவாயில்லை எனக் கூறிய வெளிநாட்டு ஜோடி பணத்தை பார்ப்பது போல ரூ.6ஆயிரத்தை திருடியுள்ளனர்.
கடையில் இருப்போரை திசை திருப்ப அந்த வெளிநாட்டு பெண் அனைவருடனும் செல்ஃபி எடுத்துள்ளார். அந்த நேரத்தை பயன்படுத்தி வெளிநாட்டு ஆண் பணத்தை திருடியுள்ளார். அவர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு சென்ற பிறகே பணம் காணாமல் போனது குறித்து பணிப்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது வெளிநாட்டு ஜோடி பணத்தை திருடிக் கொண்டு போனது உறுதியானது.
இதேபோல் அந்த வெளிநாட்டு ஜோடி, முத்துப்பேட்டையில் உள்ள சூப்பர் மார்கெட்டில் ரூ.30 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த வெளிநாட்டு ஜோடி கைவரிசை காட்டியுள்ளது. சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
Loading More post
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!