[X] Close

’ஆபிஸ்ல அரசியல் பேசாதீங்க...’: பணியாளர்களுக்கு கூகுள் எச்சரிக்கை!

Google-cracks-whip-on-political-debates-at-workplace

அலுவலக நேரத்தில் அரசியல் விவாதங்களில் ஈடுபட வேண்டாம் என்று கூகுள் தனது பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


Advertisement

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பணியாளர்களுக்கு இதுதொடர்பாக மெயில் அனுப்பியுள்ளார். 


Advertisement

அதில், சக ஊழியர்களுடன் தகவல்களையும் யோசனைகளையும் பகிர்ந்துகொள்வது நிறுவன மேம்பாட்டுக்கு உதவும். இதை விடுத்து, நடப்பு செய்திகள் குறித்தும் அரசியல் குறித்தும் விவாதிப்பது வேலை நேரத்தை குலைக்கும் செயல். நமது முதன் மை பொறுப்பு, வேலையை செய்வதுதான். அதற்காகத்தான் நாம் இங்கு இருக்கிறோம்.

வேலைக்குத் தொடர்பில்லாத, அரசியல் விஷயங்களை பேசி நேரத்தை செலவிட வேண்டாம். யாரையும் கிண்டலடிக்காதீர்கள். சக கூகுள் ஊழியர்களிடம் மரியாதைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்துங்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது.
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close