காபூலில் திருமண மண்டபத்தில் நடந்த தற்கொலை தாக்குதலில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷாஹ்ர்-இ- துபாய் என்ற திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்து கொண்டிருந்தது. இதற்காக ஏராளமான விருந்தினர்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது உடலில் குண்டுகளை அணிந்திருந்த ஒருவர் திடீரென அதை வெடிக்கச் செய்தார். இதில் பலர் உடல் சிதறி உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். இதையடுத்து அங்கு வந்த பாதுகாப்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை தாக்குதலில் சுமார் 40 பேர் உயிர் இழந்துள்ளதாகவும் 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருப்ப தாகவும் கூறப்படுகிறது. இந்த தற்கொலை தாக்குதலுக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!