[X] Close

இணையத்தில் வைரலாகும் பிரேமலதா விஜயகாந்தின் டப்ஸ்மேஷ் வீடியோ

PremaLatha-Vijakanth-dubsmash-video

பிரேமலதா விஜயகாந்த் தனது மகனுடன் டப்ஸ்மேஷ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திரைப்பட காட்சிகளை நடித்துக் காட்டும் இந்த டப்ஸ்மேஷ் பீவர் தற்போது அரசியல் பிரபலங்களையும் தொற்றிக் கொண்டு விட்டது போலும்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது தனது மகனுடன் டப்ஸ்மேஷ் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.


Advertisement

அந்த டப்ஸ்மேஷ் வீடியோவில், வேலையில்லா பட்டதாரி படத்தில் சரண்யா பொன்வண்ணன் தனது மகனான தனுஷிடம் உனக்கு லவ்வெல்லாம் இருக்காடா என கேட்பார். அந்த டயலாக்கை சிறப்பாக டப்ஸ்மேஷ் செய்து பேசியுள்ளார் பிரேமலதா. அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement
[X] Close