
சென்னையில் கடந்த இரு மாதங்கள் தண்ணீர் பஞ்சம் அதிகமாக காணப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இல்லாததும் பருவமழை பொய்த்து போனதாலும் சென்னையில் தண்ணீர் தட்டுபாடு அதிகரித்துள்ளது. மேலும் நிலத்தடி நீரும் குறைந்து போனதால் பொது மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையிலுள்ள ஐடி நிறுவனங்கள் தண்ணீர் இல்லாததால் அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும் படிஅறிவுறுத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பொது நல அமைப்பு ஒன்று 2019ம் ஆண்டில் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகில் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 5 இடங்கள் கீழே இறங்கியுள்ளது.
சென்னை நகர மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அண்மையில் ஒரு புகைப்படம் வைரலானது. அது ஒரு யானை தனக்கான உணவைத் தேடி மலைச் சரிவிகளில் நின்று உணவைத் தேடுவதுபோல அமைந்திருந்தது. இந்தப் புகைப்படத்துக்கு பலரும் வருத்தத்தை தெரிவிந்திருந்தனர். அதாவது தன் உணவுக்காக யானை உயிரை பணயம் வைத்து செல்கிறது என்ற ரீதியில் தங்களது கருத்துகளை பதிவிட்டிருந்தனர்.
நடிகைகள் காணாமல் போனதாக புகார் வந்தால் மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், சாதாரண மக்கள் காணாமல் போன புகார் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என கண்டனம் தெரிவித்துள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு காங்கிரசின் தலித் பிரிவு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஏஎன்-32 ரக விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.