[X] Close

காசாளர் பழனிசாமியின் மரணத்துக்கு காரணம் கொலைதான் - மருத்துவ அறிக்கை தகவல்

Palanisamy-s-death-is-the-murder-says-medical-report

லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமியின் மரணம், கொலை தான் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Advertisement

கோவையில் தொழிலதிபர் மார்டினுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தில் பழனிசாமி என்பவர் காசாளராக பணியாற்றி வந்தார். மார்டினுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், பழனிசாமியின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் நேரிலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.


Advertisement

இதனிடையே, மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வெள்ளியங்காடு என்ற இடத்தில் மே3ம் தேதி பழனிசாமி சடலமாக மீட்கப்பட்டார்.  அவரது உயிரிழப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் பழனிசாமியிடம் விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது தந்தையின்  உடலை, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென அவரின் மகன் ரோகின்குமார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்நிலையில் 2வது முறையாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் காசாளர் பழனிசாமியின் மரணம், கொலை என தெரியவந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை மருத்துவர் சம்பத்குமார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்


Advertisement

Advertisement

Advertisement
[X] Close