[X] Close

பரோலில் இன்று வெளிவருகிறார் நளினி

Rajiv-Gandhi-assassination-case--Nalini-to-come-out-on-parole-today

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, இன்று காலை பரோலில் வெளிவருகிறார்


Advertisement

மகள் திருமணத்திற்காக நளினிக்கு ஒருமாதம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் இருந்து, அவர் இன்று பரோலில் வெளியேவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காலையில் பரோல் உத்தரவு கிடைத்தவுடன் சுமார் 8:30 மணி அளவில் அவர் சிறையிலிருந்து வெளியே அனுமதிக்கப்படுவார் எனத் தெரிகிறது.


Advertisement

வேலூர் மாவட்டத்தில் உறவினர் வீட்டில் தங்க உள்ள நளினிக்கு, அவரது தாய் மற்றும் உறவினர் ஒருவர் உத்தரவாதம் அளித்துள்ளனர். பரோலில் இருக்கும் காலத்தில் அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கக் கூடாது, ஊடகத்துக்கு பேட்டி அளிக்கக் கூடாது என அவருக்கு கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. ஒருமாத பரோலை நீட்டிக்குமாறு அரசிடம் கோர உள்ளதாக நளினி தரப்பு வழக்கறிஞர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close