Published : 18,Jul 2019 04:07 PM
“என் தோட்டத்தில் பணம் வைத்தது யாரென எனக்கு தெரியும்” - துரைமுருகன்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது தனது தோட்டத்தில் பணத்தை பதுக்கி வைத்தவர்கள் யாரென தனக்கு தெரியும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
ஆம்பூர் சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவில் துரைமுருகன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், “என் வீட்டுத் தோட்டத்தில் பணத்தை பதுக்கி வைத்தவர்கள் யாரென எனக்கு தெரியும். பொறுத்திருந்து பாருங்கள். என் வீட்டில் சோதனை செய்வதற்காக ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமித்தது யார் ? என் மகனை லாரி ஏற்றி கொல்லச் சொன்னது யார் ”? என கூட்டத்தில் கண்ணீர் மல்க பேசினார்.
முன்னதாக, மக்களவைத் தேர்தலின் போது வேலூரை தவிர இந்தியா முழுவதும் தேர்தல் நடந்து முடிந்தது. வேலூரில் மட்டும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டதாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக இருந்து ரூ.10 கோடிக்கும் மேலாக பணம் எடுக்கப்பட்டது. இந்நிலையில் வேலூர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது.