Published : 11,May 2017 03:25 AM

சிபிஎஸ்இ படிக்கும் திமுகவினரின் பிள்ளைகள்: ஹெச்.ராஜா எச்சரிக்கை

H-Raja-cbse-issue

சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் திக, திமுக அரசியல் கட்சியினரின் பிள்ளைகள் பட்டியல் வெளியிடப்படும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்‌, 2014-15ம் ஆண்டில் தமிழகத்தில் 2ஆயிரத்து 978 பேரில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து 4.5 சதவிகித மாணவர்கள் மட்டுமே மருத்துவத்தில் சேர்ந்துள்ளனர். நீட் தேர்வு இல்லாதபோதே இந்த நிலை. தமிழக பாட திட்டங்கள் தரமில்லாமல் இருப்பதே இதற்கு காரணம் என விமர்சித்த அவர், சேகர் ரெட்டி வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது கிடைத்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர்கள், அதிகாரிகளை மாநில அரசு காப்பாற்ற முயற்சிக்கிறது. அண்ணா நகர் மகேஷ், சென்னை சாதிக் பாஷா, நாமக்கல் சுப்பிரமணியன் உள்ளிட்ட சந்தேக மரணத்தையும், கோடநாடு வழக்கையும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். பணம் கொடுத்தால் பதவி என்ற நிலை தமிழக சுகாதாரத்துறையில் உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக கடந்த 6 ஆண்டுகளில் மருத்துவமனையில் வாங்கப்பட்டுள்ள உபகரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி சுகாதாரத் துறையை மீட்க வேண்டும். தமிழ் மொழி வீழ்ச்சிக்கு திராவிட கட்சிகள் தான் காரணம். சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் திக, திமுக அரசியல் கட்சிகளின் பிள்ளைகளின் பட்டியல் வெளியிடப்படும்’ என அவர் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்