[X] Close

பண மோசடி வழக்கு: ’வுல்ஃப் ஆப் வால் ஸ்ட்ரீட்’ தயாரிப்பாளர் கைது

Wolf-of-Wall-Street-producer-arrested-in-Malaysia-for-money-laundering

பண மோசடி வழக்கில், ’த வுல்ஃப் ஆப் வால் ஸ்ட்ரீட்’ என்ற ஹாலிவுட் படத்தின் தயாரிப்பாளர் ரிஜா அஜீஸ் (Riza Aziz) மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.


Advertisement

லியோனார்டோ டிகாப்ரியோ, மார்க்காட் ரூபி, ஜோனா ஹிட் உட்பட பலர் நடித்த ஹாலிவுட் படம், ’த வுல்ஃப் ஆப் வால் ஸ்ட்ரீட்’(The Wolf Of Wall Street). மார்ட்டின் ஸ்கோர்செசி இயக்கிய இந்தப் படத்தை, லியோனார்டோ டிகாப்ரியோவுடன் இணைந்து தனது ரெட் கிரானைட் பிக்சர்ஸ் (Red Granite Pictures) சார்பில் தயாரித்திருந்தார் ரிஜா அஜீஸ். இவர், மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவியான ரோஸ்மா மன்சூரின் முதல் கணவருக்கு பிறந்த மகன்.


Advertisement

அஜீஸ், ’ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவன’த்தின் (1MDB) பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அந்த ஹாலிவுட் படத்தை தயாரித்ததாகப் புகார் கூறப்பட்டது. அரசுக்கு சொந்தமான அந்த நிறுவனத்தின் பணம், முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் சொந்த வங்கி கணக்குக்கும் அவரது நெருங்கியவர்களின் கணக்குகளுக்கும் முறைகேடாகச் சென்றதாக ஏற்கனவே புகார் கூறப்பட்ட நிலையில், ரிஜா அஜீஸ் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

இந்த ஊழல் விவகாரம் சர்ச்சையானதை அடுத்து, இந்தப் படத்துக்கான பெற்ற ஊதியத்தை லியோர்னாடோ அமெரிக்க அரசின் நீதித் துறைக்குத் திருப்பிக் கொடுத்து விட்டார். அஜீஸும் தனது நிறுவனப் பணத்தில் இருந்து கணிசமானத் தொகையை அமெரிக்க அரசுக்கு திருப்பிச் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement
[X] Close