தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. அதில் மக்கள் பல்வேறுவிதமான கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்களை நிறைவேற்றினர். குறிப்பாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், விளைநிலங்கள் வழியாக உயர்மின்கோபுரங்கள் அமைக்க தடை, மீத்தேன் எரிவாயு எடுக்க தடை, கெயில் குழாய்கள் பதிக்க தடை உள்ளிட்ட விஷயங்கள் பெரும்பான்மையாக இருந்தன. சில இடங்களில் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த மக்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே வேட்டங்குடி ஊராட்சிக்கு உட்டபட்ட பகுதிகளில் தற்போது விளைநிலங்களில் கெயில் குழாய் பதிக்கும் பணிகள் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி நடைபெற்று வருகிறது.அதே போல் ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணறுகள் அமைக்கும் பணிகளும் நடந்து வரும் நிலையில் தற்போது ஹைட்ரோகார்பன் விரிக்கம் தொடர்பாக விவசாயிகளுக்கு கடிதம் வந்துள்ளது. இந்நிலையில் இன்று வேட்டடங்குடி ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் கிராமமக்கள் தங்கள் கிராமத்தில் ஏற்கவே நடைபெறும் ஓ.என்.ஜி.சி மற்றும் கெயில் குழாய் பணிகளை உடனே நிறுத்த கோரியும் வரப்போகும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றினர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆதனூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் ஊராட்சி செயலாளர் தங்கராசு தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் பகுதியைச் சேர்ந்த 300 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நாகை மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்தியஅரசு கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டி கிராம மக்கள் மனு அளித்தனர்
சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, சொந்த ஊரான கீரப்பாளையம் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார். கீழ்நிலை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க தமிழக அரசுக்கு அழகிரி வலியுறுத்தினார்.
தஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் திட்டங்களை டெல்டா மாவட்டங்களில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என அந்தந்த பகுதி விவசாயிகள் வலியுறுத்தியதை அடுத்து கிராமசபை கூட்டங்களில் பல கிராமங்களில் ஒருமித்து தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது .
மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்ற கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றக்கூடாது, கெயில் குழாய்களை வயல்களில் பதிக்க்ககூடாது, அணுக்கழிவு மையத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றை பொதுமக்கள் முன்னிலையில், அதிகாரிகள் வாசித்து காட்டினர். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இன்று நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . கோவை மாவட்டம் செம்மாண்டம்பாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விளைநிலங்கள் வழியாக மின் கோபுரம் அமைக்க கூடாது என அளித்த மனுவின் அடிபடையில் தீர்மானம் நிறைவேற்றபட்டது
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்