[X] Close

“கிரிக்கெட் என்பது சிறந்த ஆசான்” - விராட் கோலி நெகிழ்ச்சி

-I-think-cricket-is-really-a-great-teacher-in-many-ways----Virat-Kohli

கிரிக்கெட் போட்டி சிறுவர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.


Advertisement

இங்கிலாந்தின் ரோஸ் பவுல் மைதானத்தில் ஐசிசி சார்பில் பள்ளிச் சிறுவர்களுக்கு கிரிக்கெட் நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோர் கலந்துக்கொண்டனர். போட்டியின் போது பேசிய விராட் கோலி, கிரிக்கெட் என்பது சிறுவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என தான் நம்புவதாக கூறினார். அத்துடன் கிரிக்கெட் உண்மையில் மனித நேயத்தை வளர்ப்பதாகவும், அது வாழ்வில் பல கட்டங்களை புரிய வைப்பதாகவும் தெரிவித்தார்.


Advertisement

கிரிக்கெட் விளையாடினால் அனைவரும் வீழ்ச்சியை புரிந்துகொள்ள முடியும் என்றும், வாழ்வின் நல்ல கட்டங்களை புரிந்துகொள்ள முடியும் என்றும் கூறினார். அத்துடன் கடினமான நேரங்களில் இருந்து எப்படி மீண்டு வர முடியம் என்பதை கற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டார். எனவே கிரிக்கெட் என்பது பல வழிகளில் வாழ்வின் சிறந்த ஆசிரியர் என தான் நினைப்பதாகவும் தெரிவித்தார்.  


Advertisement

Advertisement
[X] Close