நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார். பதவியேற்பு விழாவில், வெளிநாட்டுத் தலைவர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர்.
குஜராத் முதல்வராக இருந்து, பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதை ஒட்டுமொத்த உலக நாடுகளும் உன்னிப்பாக கவனித்தது. பிரதமராக பதவியேற்பதற்கு முன்பாகவே, அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டும் வகையில் நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி அவர் அழைப்பு விடுத்ததே அதற்கு காரணம். பிரதமராக பதவியேற்றதும், நாடாளுமன்றத்தின் வாசற்படியை தொட்டு வணங்கி அவர் உள் நுழைந்ததை ஒவ்வொரு பாஜக தொண்டனும் நெகிழ்ச்சியுடன் கண்டனர். அந்த சம்பவம் அவர் இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கும் நாள் வரை அனைவரது கண்களிலும் நீங்காமல் நிழலாடி வருகிறது.
17-வது மக்களவைக்காக நடந்த இந்தத் தேர்தலிலும் பாரதிய ஜனதா மட்டும் தனியாக 303 இடங்களை வென்று, அதீத பெரும்பான்மையுடன் இன்று இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார் மோடி. கடந்த முறை போலவே, இம்முறையும் வெளிநாட்டுத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைவரையும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விழாவில் வங்கதேசம் அதிபர் அப்துல் ஹமீது, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பெக்கோவ், மொரீஷியஸ் அதிபர் பிரவிந்த் குமார் ஜுகுநாத், நேபாள பிரதமர் ஷர்மா ஒளி, மியான்மர் அதிபர் வின் மின்ட், தாய்லாந்து அதிபர் சார்பில் சிறப்பு பிரதிநிதி கிரிசாடா பூன்ராச், பூடான் பிரதமர் ஷெரிங் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இது தவிர பல்வேறு நாடுகளில் இருந்து சிறப்பு பிரதிநிதிகளும் பதவியேற்பு விழாவுக்கு வருகை தரவுள்ளனர்.
அதேபோல், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம், புதச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஆகியோரும் விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விளையாட்டு பிரபலங்களான ராகுல் டிராவிட், சாய்னா நேவால், திரை நட்சத்திரங்களான நடிகர் ரஜினிகாந்த், ஷாருக் கான் உள்ளிட்ட ஏராளமானோர் விழாவில் பங்கேற்கின்றனர். தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அதானி, ரத்தன் டாடாவுக்கும் பதவியேற்பு விழாவுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தொழிலதிபர்களான பில் கேட்ஸ், ஜான் சேம்பர்ஸும் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை பிரதமராக மோடி பதவியேற்றபோது விருந்தினர்களாக 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த முறை சுமார் 6 ஆயிரத்து 500 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கபப்டுகிறது.
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்