மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவும் நிறைவடைந்ததது.
மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று 7-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதிகட்டமாக மொத்தமாக 8 மாநிலங்களிலுள்ள 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இது தவிர தமிழகத்தில் திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவும் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் சின்னச் சின்ன பிரச்னைகள் இருந்தாலும் பெருவாரியான வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது. மாலை 6 மணியோடு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 59 தொகுதிகளிலும் 60.21 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide