ரிஷப் பண்டிற்கு சுரேஷ் ரெய்னா ஷூ லேஸ் கட்டும் வீடியோ காட்சிகள் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே 2வது தகுதிச்சுற்று போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் 38(25) ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
ரிஷப் பண்ட் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அவரது ஷூ லேஸ் அவிழ்ந்துவிட்டது. அதனை அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த சுரேஷ் ரெய்னா கட்டிவிட்டார். ரிஷப்க்கு சுரேஷ் ரெய்னா ஷூ லேஸ் கட்டும் போட்டோ சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். ஐபிஎல் நிர்வாகமும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரெய்னா ஷூ லேஸ் கட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளனர்.
கிரிக்கெட் ஒரு ஜென் டில்மேன் கேம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் எனப் பலரும் பாராட்டியுள்ளனர். அதாவது, அனுபவம் மிக்க வீரரான ரெய்னா, புதிய வீரரான ரிஷப் பண்ட்க்கு லேஸ் கட்டியதை பலரும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளனர். 148 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் எடுத்துள்ளது.
Loading More post
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
'மொழி அரசியலில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள்' - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்