தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்கும் நீதிபதி பாப்டே தலைமையிலான குழுவை 2 உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இந்தப் புகாரை அடுத்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, இதுகுறித்து விசாரிக்க மூத்த நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார். மேலும் இக்குழு ரகசியமாக விசாரணை நடத்தும் எனத் தகவல் வெளியானது.
இதனிடையே, இந்தக் குழுவின் விசாரணைக்கு ஆஜராக போவதில்லை என புகார் அளித்த பெண் தெரிவித்தார். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் நரிமான் மற்றும் சந்திரசூட் ஆகியோர் நீதிபதி பாப்டே குழுவை சந்தித்து, “புகார் அளித்த பெண் இல்லாமல் விசாரிப்பது தவறான முறை” எனத் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த 2 நீதிபதிகள் பாப்டே தலைமையிலான விசாரணை குழுவை சந்திக்கவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நீதிபதிகள் நரிமன் மற்றும் சந்திரசூட் ஆகியோர் பாப்டே தலைமையிலான விசாரணைக் குழுவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. ஆனால் பாப்டே தலைமையிலான விசாரணை குழுவை எந்த நீதிபதியும் சந்திக்கவில்லை. அந்த குழு தனது விசாரணையை யாருடைய தலையீடும் இன்றி செய்துவருகிறது” எனத் தெரிவித்துள்ளது.
Loading More post
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?