[X] Close

தாய், சகோதரி கொடூரக்கொலை: சாப்ட்வேர் மகன் கைது

mother-and-daughter-murder-by-son

சென்னையின் மையப்பகுதியாக உள்ள சைதாப்பேட்டையில் தாயும், மகளும் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை, கே.பி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஹேமலதா. மகன் பாலமுருகன், மகள் ஜெயலட்சுமி ஆகியோருடன் வசித்து வந்தார். நேற்று இவர்கள் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அக்கம் பக்கத்து வீட்டினர் அவர் வீட்டுக்குள் எட்டிப்பார்த்தனர். அங்கு ஹேமலதாவும், ஜெயலட்சுமியும் கழுத்து அறுபட்ட நிலையில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த சைதாப்பேட்டை போலீசார், இருவரது உடலையும் கைப்பற்றி விசாரணை செய்தனர்.

படுகொலை செய்யப்பட்ட ஹேமலதா, அண்ணா பல்கலைக்கழக ஊழியர். இவரது மகள் ஜெயலட்சுமி, இளங்கலை பட்டதாரி. மகன் பாலமுருகன் சாப்ட்வேர் என்ஜினீயர். ஹேமலதாவின் கணவர் சண்முகம் சென்னை பெருநகர குடிநீர் வடிவால் வாரியத்தில் பணியாற்றியவர். அவர் மரணமடைந்ததை அடுத்து, சைதாப்பேட்டைக்கு குடிவந்துள்ளனர்.


Advertisement

அம்மாவும் மகளும் கொல்லப்பட்ட நிலையில் மகன் பாலமுருகனை காணவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவ‌ல்துறையினர், பாலமுருகனை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


Advertisement

Advertisement
[X] Close