தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுப் போய்விட்டது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை அவிநாசி சாலையில் இன்று கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கமல்ஹாசன், செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது, கேள்வி கேட்கவில்லை என்ற ஒரே காரணத்தால் தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுப் போய்விட்டதாகக் கூறினார். தமிழகத்தில் திட்டங்களைச் செயல்படுத்துவது சாத்தியம் என்ற நமபிக்கையே போய் விட்டதாகவும், ஆட்சியாளர்களிடம் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் எனவும் கமல் தெரிவித்தார்.
மத்தியில் இந்த முறை பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நிலவ வாய்ப்புள்ளதாகவும், எனவே மூன்றாவது அணி அமையும் என நாடெங்கும் உள்ள தலைவர்கள் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே உள்ள அரசியல் சூழல்தான் தன்னை கோபத்திற்கு ஆளாக்கி அரசியலில் களமிறங்கச் செய்ததாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பிக்கு தமிழகம் அல்ல இந்தியா முழுவதும் இருந்து ஆதரவு கிடைக்கும் என்று கூறினார்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்