Published : 02,Apr 2019 05:05 AM
இயக்குநர் மகேந்திரனின் மறைவு பேரிழப்பு- ஸ்டாலின் இரங்கல்

இயக்குநர் மகேந்திரனின் மறைவு பேரிழப்பு என திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 79. மகேந்திரனின் உடல் தற்போது சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி அளவில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு, திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் திரையுலக இயக்குநர்களில் கதாநாயகராக விளங்கியவர் இயக்குநர் திரு மகேந்திரன்.
— M.K.Stalin (@mkstalin) April 2, 2019
எளிமைக்கு இலக்கணம் - யதார்த்த சினிமா இயக்குநர் - வசனகர்த்தா - நடிகர் என பன்முகத் திறமை கொண்ட இயக்குநர் மகேந்திரனின் மறைவு பேரிழப்பு!
அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்! #RIPMahendran pic.twitter.com/uuDJyTVek6
இந்நிலையில் இயக்குநர் மகேந்திரனின் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “ தமிழ்த் திரையுலக இயக்குநர்களில் கதாநாயகராக விளங்கியவர் இயக்குநர் திரு மகேந்திரன். எளிமைக்கு இலக்கணம் - யதார்த்த சினிமா இயக்குநர் - வசனகர்த்தா - நடிகர் என பன்முகத் திறமை கொண்ட இயக்குநர் மகேந்திரனின் மறைவு பேரிழப்பு! அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்! ” என தெரிவித்துள்ளார்.