[X] Close

ஒரே வரி பதில்: தினகரனிடம் 3-வது நாளாக இன்றும் விசாரணை

third-day-investigation-with-dhinakaran

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன், இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராக டெல்லி காவல் துறை உத்தரவிட்டுள்ளது.


Advertisement

நள்ளிரவு 12.30 மணி வரை 2ஆவது நாளில் சுமார் 10 மணி நேரம் தினகரனிடம் விசாரணை நடந்த நிலையில், 3ஆவது நாளாக இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகர் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இரட்டை இலைச் சின்னத்தை பெற முயன்றார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய விசாரணை இரவு 12.30 மணி வரை நீடித்தது.


Advertisement

டிடிவி தினகரன், அவரது உதவியாளர் ஜனார்த்தனன், நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகிய நால்வரையும் ஒரே ‌அறையில் வைத்தும், தனித்தனியாகவும் டெல்லி காவல்துறையினர் விசாரித்தனர்‌. பெரும்பாலான கேள்விகளுக்கு டிடிவி தினகரன் ஒரே வரியில் பதிலளித்ததாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Tags : dhinakarandhinakaran investigation

Advertisement

Advertisement
[X] Close