[X] Close

’சில நேரம் உண்மை பேச வேண்டியிருக்கு’: ரஹானே உருக்கம்!

-I-deserve-a-chance----Ajinkya-Rahane

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே. இவர், ஒரு நாள் போட்டிகளில் இருந்து சமீபகாலமாக ஓரங்கப்பட்டப்பட்டு வருகிறார். கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்றார். பிறகு ஒரு நாள் போட்டிக்கான அணியில் சேர்த்துக் கொள்ளப் படவில்லை. சமீபத்தில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் அவர் அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், தனக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று உருக்கமாகக் கூறியுள் ளார். 

இதுபற்றி அவர் கூறும்போது, ’நான் ஆக்ரோஷமான பேட்ஸ்மேன்தான். ஆனால் இயல்பில் கூச்ச சுபாவம் கொண்டவன். பேட் தான் பதில் அளிக் க வேண்டும் என்று நினைப்பவன். ஆனால் சில நேரம் உண்மையை பேச வேண்டி இருக்கிறது. அணியின் நலனுக்கே எப்போதும் முன்னுரிமை அளித்துள்ளேன். ஒரு வீரராக, நான் அணிக்கு முன்னுரிமை அளிக்கும் போது, எனக்கு தொடர்ந்து வாய்ப்பு தரப்பட வேண்டும். அதற்கு தகுதி யானவன்தான் நான். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், தனிப்பட்ட சாதனைக்காக நான் விளையாடியதில்லை. 


Advertisement

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக தொடக்க வீரராகக் களமிறங்கினேன். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 4 வது வரிசையில் இறக்கப் பட்டேன். அணி நிர்வாகத்தின் முடிவை ஏற்றுக்கொண்டேன். ஆனால், நமக்கு அணியில் ஆதரவு இருக்கிறது என்று நினைக்கும் போதுதான் ஒரு வீரர் பயமில்லாமல் ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.


Advertisement

இந்நிலையில் நான் கைவிடப்பட்டதாக உணர்ந்தால் என் மனம் எதிர்மறையாக மாறி விடும். இருந்தாலும் நான் பாசிட்டிவ் எண்ணம் கொண்ட வன். நான் நன்றாக ஆடிவருவதாகவே நினைக்கிறேன்.  தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், உலகக்கோப்பை அணி பரிசீலனையில் நான் இருக்கிறேன் என்று கூறியிருப்பது மகிழ்ச்சிய ளிக்கிறது. நான் இன்னும் நம்பிக்கையுடன் தான் இருக்கிறேன்’’ என்றார்.  


Advertisement

Advertisement
[X] Close