[X] Close

அதிமுக எம்.பி.ராஜேந்திரன் சாலை விபத்தில் உயிரிழப்பு

Admk-MP-dies-in-road-accident

திண்டிவனம் அருகே நடந்த சாலை விபத்தில் அதிமுக எம்.பி., ராஜேந்திரன் உயிரிழந்தார். அவருக்கு வயது 62. 

விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி. ராஜேந்திரன். பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுகவினருக்கு தைலாபுரம் தோட்டத்தில் நேற்று விருந்து கொடுத்தார். அதில் கலந்துகொண்ட ராஜேந்திரன், அங்கிருந்து அவரது சொந்த ஊரான வானூருக்கு நள்ளிரவில் சென்றார். இன்று காலை 4 மணியளவில் அங்கிருந்து அவரது வீடு உள்ள விழுப்புரத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

திண்டிவனம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவர் சென்ற கார் சாலை தடுப்பில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் எம்.பி, ராஜேந்தி ரன், அவரது கார் டிரைவர் அருமைநாயகம் மற்றும் காரில் இருந்த மற்றொருவர் படுகாயம் அடைந்தனர். அந்தப் பகுதியில் சென்றவர்கள், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடி கொண்டிருந்த இவர்களை மீட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு எம்.பி, ராஜே ந்திரன் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


Advertisement

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 


Advertisement

Advertisement
[X] Close