Published : 11,Jan 2017 02:44 AM
மிகப் பெரிய உற்பத்தி நாடுகளில் இந்தியா 6 வது இடம்.... பிரதமர் மோடி பெருமிதம்

உலகளவில் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
குஜராத்தில் நடைபெற்ற ‘வைப்ரன்ட் குஜராத்’ எனப்படும் முதலீட்டாளர்கள் மாநாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பிரதமர், கடந்த இரண்டரை ஆண்டுகளில் அரசின் செயல்பாடுகளால், முதலீடு செய்வதற்காக அன்னிய நிறுவனங்களின் கவனம் இந்தியா மீது அதிகளவில் திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்தம் செய்வதில் அரசு உறுதியாக உள்ளது என குறிப்பிட்ட பிரதமர், மின்னணு பொருளாதாரத்தை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், மின்னணு நிர்வாகம் எளிமையானது என்றும் தெரிவித்தார். உலக பொருளாதாரத்தின் இயந்திரமாக இந்தியா விளங்குவதாகவும் பிரதமர் கூறினார்.
உலகளவிலான மிகப் பெரிய உற்பத்தி நாடுகளில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளதாக தெரிவித்த பிரதமர், அன்னிய முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்குவதாக குறிப்பிட்டார்.